செந்தூரில் நின்றாடும் கந்தா குஹா
சிங்காரா வேலா சிவ ஷண்முகா
திருசெந்தூரில் நின்றாடும் கந்தா குஹாகார்த்திகை குமரா கதிர்வேலவா
வயலூரவா வடிவேலவா (திருசெந்தூரில்)
குன்றாடும் குமரோனே கூர்வேலவா
உலகாளும் தேவா என்னை ஆளவா
மாலவன் மருகோனே முருகோனே வா
மனமோகனா மயில்வாகனா
வள்ளி மனமோகனா புள்ளி மயில்வாகனா (திருசெந்தூரில்)
வேலோடு விளையாடும் வடிவேலவா
விரைந்தோடி வந்தென் வினை தீர்க்க வா
அருள் காட்ட உனக்கீடு இணை யாரப்பா
பழநியப்பா வருவாயப்பா
ஞான பழநியப்பா வருவாயப்பா (திருசெந்தூரில்)