Tuesday 13 June 2023

Lyrics of Ninaitha thethanayil (Thirupugazh)

Ninaitha thethanayil Thavaramal
Nilaitha Budhi thanai piriyamal
Ganatha thathuva mutrazhiyamal
Gadhitha Nithiyachith arulvaaye..

Maniththa Bhaththar thamakeliyone
Mathitha muthamizhil Periyone
Janitha Puthiralil Siriyone
Thiruthani pathiyir Perumale..

நினைத்த தெத்தனையில் தவறாமல் 
நிலைத்த புத்திதனை பிரியாமல் 
கனத்த தத்துவ முற்றழியாமல் 
கதித்த நித்திய சித் அருள்வாயே !

மனித்த பத்தர் தமக்கெளியோனே 
மதித்த முத்தமிழில் பெரியோனே 
ஜனித்த புத்திரரில் சிறியோனே 
திருத்தணி பதியிற் பெருமாளே..


Monday 25 May 2020

Lyrics of Ramanai Bhajithal

Ramanai Bhajithaal Noi vinai theerume
Sanchalam agandridume - seetha (Ramanai)

Ramanai kannal Kaanbom indre
Pirantha payan adaivom

ThunbamodInbam kalanthathu prabanjam
Veiyililaiyel Nizhalil Inbamum undo
Thuyar illayel Ayyanai Ninapaar undo
Sodhanai theeyil pudamidu vaan nammai
Thooki eduthAanandam allithiduvaan

Avan naamamrudham seviku divya oushadham
Rama naamamrudham seviku divya oushadham
Hare Ram Ram Ram Seetha Ram Ram Ram                                                                                 (Ramanai)

இராமனை பஜித்தால் நோய் வினை தீருமே
சஞ்சலம் அகன்றிடுமே - ஸீதா (இராமனை)

இராமனை கண்ணால் காண்போம் இன்றே
பிறந்த பயன் அடைவோம் 

துன்பமோடின்பம் கலந்தது பிரபஞ்சம்
வெயில் இல்லையேல் நிழலில் இன்பமும் உண்டோ
துயரில்லையேல் அய்யனை நினனப்பார் உண்டோ
சோதனை தீயில் புடமிடுவான் நம்மை
தூக்கி எடுத்தானந்தம் அளித்திடுவான்

அவன்  நாமாமிர்தம் செவிக்கு திவ்ய ஔஷதம்
இராம நாமாமிர்தம் செவிக்கு திவ்ய ஔஷதம்

ஹரே ராம் ராம் ராம் ஸீதா ராம் ராம் ராம்
                                                (இராமனை)



An excellent divine rendition of the song with virutham by Smt. Ranjani & Gayatri in Raagam Maand - https://youtu.be/1tuQfRaP9b0

Saturday 25 February 2017

Lyrics of Seetha Kalyaana Vaibhogame

Seetha kalyaana vaibhogame
Rama kalyaana vaibhogame

Pavanaja sthuthi paathra paavana charithra
Ravi soma vara nethra ramaneeya gatra  (Seetha kalyana)

Bhaktha jana paripala bharitha sara jaala
Bhukthi mukthitha leela bhudeva paala (Seetha kalyana)

Paamarasura bheema paripoorna kaama
Syaama jagathabiraama saaketha dhaama (Seetha kalyana)

Sarvalokaa dhaara samaraika veera
Garva maanasa dura kanakaaga dheera (Seetha kalyana)

Nigamagama vihaara nirupama shareera
Naga daragha vidhara nataloka dhaara  (Seetha kalyana)

Paramesha nutha geetha bhava jaladhi potha
Tharani kula sanchata thyagaraja nutha (Seetha kalyana)

சீதா கல்யாண வைபோகமே 
ராம கல்யாண வைபோகமே 

பவனஜ ஸ்துதி பாத்ர பாவன சரித்திர
ரவி சோம வர நேத்ர ரமணீய காத்ர  (சீதா கல்யாண)

பக்த ஜன பரிபால பரித சரஜால 
புக்தி முக்தித லீல பூதேவ பால  (சீதா கல்யாண)

பாமாரசுர பீம பரிபூர்ண காம 
ஸ்யாம ஜகதபிராம சாகேத தாம  (சீதா கல்யாண)

ஸர்வலோகா  தார சமரைக  வீர 
கர்வ மானஸ தூர  கனகாக தீர (சீதா கல்யாண)

நிகமாகம விஹார நிருபம சரீர
நக தராக விதார நட லோக தார (சீதா கல்யாண)

பரமேச நுத கீத பவ ஜலதி போத 
தரணி குல சஞ்சாத தியாகராஜ நுத (சீதா கல்யாண)

Link for the song: https://www.youtube.com/watch?v=lBVRsXXDJA0





Thursday 6 October 2016

Lyrics of Mangalam Gurushri Chandramouleshwarage

Mangalam Gurushri Chandramouleshwarage
Shakthi Ganapathi Sharadaambege Shankaracharyarige

Kaalabhairavage Kaali Durgige
Veera dheera shoora Hanuma Maaruthi charanake

Mallikarjunage Chelva Janardhanage
Amba Bhavani kambadha Ganapathi Chandi Chaamundige

Vidyaranyarige Vidyashankarage
Vaageeshwarige vajra dhega Garudanjaneyarige

Thungabhadrege Sringa nivasinige
Sringeri puradholu nelasiruvantha Sharadaambege 

Sachidananda Shiva Abinava Nrisimha bharathige
Chandrasekara bharathi guru saarva bhoumarige
Chandrasekara bharathi guru Vidyatheertharige
Chandrasekara bharathi guru  Bharathitheertharige
Chandrasekara bharathi guru  Vidhusekara bharathige  (Mangalam Gurushri)


Youtube link for the above song: https://www.youtube.com/watch?v=TktveZv6ZvM


Thursday 29 September 2016

Gomathi Satharathna Malai

Gomathi Satharathna Malai - Written by Thiru. Eswara Moorthi Pillai. It consists of 100 poems (four lines each) in praise of Goddess Gomathi Ambal at Sankaran Kovil. It is tuned to 50 Ragas by Kallidaikurichi Smt. A. Lalitha Sambasivan. I will be sharing some of those beautiful compositions with the Raga name in the upcoming posts. Thanks.

கோமதி  சதரத்ன மாலை
காப்பு

Raga:  Naatai

Sankaran koyilamar sankara linganar
Pangiloru gomathi thaai paathamalar - ponguthamizh
yaapaling kethuven yaanaimuga theivame
kaappaga unpor kazhal.

ராகம் : நாட்டை

சங்கரன் கோயிலமர் சங்கர லிங்கனார்
பங்கிலொரு கோமதித் தாய் பாதமலர்  - பொங்கு தமிழ்
யாப்பாலிங் கேத்துவேன் யானைமுகத்  தெய்வமே
காப்பாக உன்பொற் கழல்.

1.  Raga: Boopalam

Bharathame thirunaadu parasivame paramapathi
Aaraname yaagamame arultharum nool athirchurakum
Saaramathe saivamenum sarchamaya menanayen
Aeravarul seithanaiye seerasai Gomathiye.

ராகம் : பூபாளம்

பாரதமே திருநாடு பரசிவமே பரமபதி
ஆரணமே ஆகமமே அருள்தருநூல்  லதிற்சுரக்குஞ்
சாரமதே சைவமெனுஞ் சற்சமய மெனநாயேன்
ஏரவருள் செய்தனயே சீராசை கோமதியே.

5. Raga: Atana

Ennannai thanthaienbal ennudalai valarthathupol
Ponnanna nincheerai purinthuraikum thiralinaium
Nannariven valarthittar naanseyum kaimmarulatho
Ennulamum evarulamum irunthaalum Gomathiye.

ராகம் : அடாணா

என்னன்னை தந்தையென்பால் என்னுடலை வளர்த்ததுபோல்
பொன்னன்ன நின்சீரைப் புரிந்துரைக்கும் திறலினையு
நன்னரிவண் வளர்த்திட்டார் நான்செயுங்கைம்  மாறுளதோ
வென்னுளமு மெவருளமு மிருந்தாளும் கோமதியே .



Monday 11 July 2016

Lyrics of Ninaikaatha neramillai Muruga song

Ninaikaatha neramillai muruga
Ninainthu ninainthu urugi paadinen (Ninaikaatha)

Ninaitha pothu enthan munne vara venum
Ninaithathellam neeyaga vendum  (Ninaikaatha)

Anaithu konden nenjil
aadum mayilinil odi varum vadivelaa
Ninaithu kondu ennai etri vaipaai muruga
urugi paadinen nee enakarul purivaai (Ninaikaatha)

நினைக்காத நேரமில்லை முருகா 
நினைந்து  நினைந்து உருகி பாடினேன் (நினைக்காத )

நினைத்த போது எந்தன் முன்னே வர வேணும் 
நினைத்ததெல்லாம் நீயாக வேண்டும் (நினைக்காத )

அணைத்து கொண்டென் நெஞ்சில் 
ஆடும் மயிலினில் ஓடி வரும் வடிவேலா 
நினைத்து கொண்டு என்னை ஏற்றி வைப்பாய் முருகா 
உருகி பாடினேன் நீ எனக்கருள் புரிவாய் (நினைக்காத)



Wednesday 30 March 2016

Thirupugazh - Ayngaranai ottha manam Lyrics

Ayngaranai otthamanam aiympulam magatrivalar 
         anthi pagal atraninai varulvaaye

ambuvithanakkul valar senthamizh valuththiyunai  
         anbodu thuthika mana marulvaaye

thangiya thavathunarvu thanthadimai mukthipera
         chandiravelikku vazhi yarulvaaye

thandigai ganappavusu yendisai mathikkavalar
         samprama vidhathudane arulvaaye

mangayar sugaththaivegu ingitha menutramanam
         mundranai  ninaithamaya arulvaaye

mandaliga rappagalum vantha subaratchaipuri
         vanthanaiya buddhiyinai yarulvaaye

kongiluyir petruvalar thenkaraiyil appararul
         kondu udalutra porul arulvaaye

kunjara mugar kilaya kandhanena vetriperu
         kongana girikul valar perumaale..

ஐங்கரனை யொத்தமன மைம்புல மகற்றிவள 
            ரந்திபக லற்றநினை வருள்வாயே 
அம்புவிதனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தியுனை 
           அன்பொடு துதிக்கமன மருள்வாயே 
தங்கிய தவத்துணர்வு தந்தடிமை முக்திபெற 
           சந்திரவெளிக்கு வழி யருள்வாயே 
தண்டிகை கனப்பவுசு எண்டிசை மதிக்கவளர் 
           சம்ப்ரமவி தத்துடனே அருள்வாயே 
மங்கையர் சுகத்தைவெகு இங்கிதமெனுற்ற மன
          முன்றனை நினைத்தமைய அருள்வாயே 
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி 
          வந்தணைய புத்தியினை யருள்வாயே 
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள் 
         கொண்டுஉட லுற்றபொரு ளருள்வாயே 
குஞ்சரமுகற் கிளைய கந்தனென வெற்றிபெறு 
         கொங்கண கிரிக்குள்வளர்  பெருமாளே